பொழுதுபோக்கு

பிரபல பாடகி சைந்தவியின் உண்மை முகம்! வெளியானது வீடியோ!

பிரபல பின்னணி பாடகி சைந்தவி (Saindhavi) செய்த ஒரு செயல் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

அண்மையில் முடிவடைந்த சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா, தனது வாழ்க்கை கதையை ஆரம்பத்திலேயே மேடையில் பகிர்ந்திருந்தார்.

அந்த நேரத்தில் பாடகி சைந்தவி, “நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு உண்மையான சகோதரி போல நான் துணையாக இருப்பேன்” என ஆறுதல் கூறியிருந்தார்.‌

பொதுவாக நிகழ்ச்சிகளில் இப்படியான வார்த்தைகள் சொல்லப்படுவது வழக்கம்தான். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு பலரும் அதை மறந்து விடுவார்கள் என்ற விமர்சனமும் இருக்கும். ஆனால் சைந்தவி அப்படிச் செய்யவில்லை என்பதுதான் இப்போது பேசப்படுகிறது.

நிகழ்ச்சி முடிந்த பிறகும், பவித்ராவையும் அவரது மகளையும் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மாலுக்கு அழைத்து சென்று, அந்த குழந்தையுடன் நேரம் செலவிட்டுள்ளார்.

குழந்தையுடன் விளையாடி, அவளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து, முழு நேரமும் அவளுடன் இருந்துள்ளார்.

இது குறித்த காணொளி மற்றும் படங்களையும் பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, சைந்தவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதைக் கண்ட ரசிகர்கள், “சைந்தவி நிகழ்ச்சிக்காக மட்டும் பேசவில்லை, உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார்” என்று பாராட்டி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/DVZACC2Euck/?utm_source=ig_web_copy_link

Mahi

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!