உலகம் செய்தி

ஈரான் போர்க்கப்பலை நாங்களே மூழ்கடித்தோம்: அமெரிக்கா அறிவிப்பு!

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலிலேயே ஈரான் போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள பகுதியில் வைத்தே (இந்து சமுத்திரத்தில்)  இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஈரான் கப்பல் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானது.

போர்க் கப்பல் அனர்த்தத்துக்கு உள்ளானதை என்ற தகவலை மட்டுமே வெளியிட்ட இலங்கை கடற்படை, தாக்குதலுக்கு இலக்கானதா என்பது பற்றி உறுதியாக கூறவில்லை.

விசாரணைகளின் பின்னரே அது பற்றி தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அமெரிக்க தரப்பில் இருந்து மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதி நவீன தொழில்நுட்பங்களுடன் ஈரானின் சொந்த தயாரிப்பிலேயே மேற்படி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி