இந்தியா

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குகிறது கனடா: ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்தியாவின் India அணு மின் உற்பத்திக்குரிய யுரேனியத்தை வழங்குவதற்கு கனடா Canada இணக்கம் வெளியிட்ட நிலையில் இது தொடர்பில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்திய பிரதமரின் அழைப்பின் பேரில் கனடா பிரதமர் மார்க் கார்னி Mark Carney கடந்த 27 ஆம் திகதி இந்தியா வந்தார்.

இந்நிலையில் பயணத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது பிரதமர் மோடியும், பிரதமர் கார்னியும் இரு நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்து பேச்சு நடத்தினர்.

இந்தியா – கனடா இடையேயான ஒத்துழைப்பில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்த அவர்கள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், விவசாயம், கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, அணு மின்சார உற்பத்திக்கான யுரேனியத்தை வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவுக்கு கனடா யுரேனியத்தை வழங்கும். கனிம வளத் துறையில் ஒத்துழைப்பு உட்பட பல ஒப்பந்தங்களில் இரு தரப்பும் கையெழுத்திட்டன.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!