ஐரோப்பா செய்தி

பிரித்தானிய ரோயல் விமானப்படை தளம் மீது மீண்டும் தாக்குதல்?

சைப்ரஸ் தீவில் உள்ள அக்ரோதிரி (Akrotiri) பிரித்தானிய ரோயல் விமானப்படை தளத்தை நோக்கிச் சென்ற இரண்டு ஆளில்லா வான்வழி வாகனங்கள் இன்று திங்கட்கிழமை சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக சைப்ரஸ் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இன்றைய தினம் ஊழியர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும், அப்பகுதியில் சைரன்கள் ஒலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி (Akrotiri) மீது நேற்றைய தினமும் ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அக்ரோதிரியில் வசிக்கும் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் சைப்ரஸ் தீவிற்கு அருகிலுள்ள தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

எவ்வாறாயினும் நேற்றைய தினம் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்பதுடன் தளத்திற்கு சிறியளவான சேதம் மட்டுமே ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்புக்கு முழுமையான முன்னுரிமையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியாவின் பாதுகாப்பையும் நலன்களையும் பாதுகாக்க வழமையான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!