அவசரகாலச் சட்டம் நீடிப்பு!
இலங்கையில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பை உறுதி செய்தல், பொது ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அவசர நிலை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவசர கால சட்டத்தை நீடிப்பதற்குரிய யோசனை இவ்வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அனுமதி பெறப்படும்.
பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறுவதற்கு அவசரகால அதிகாரங்கள் பயன்படுத்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.




