கமேனியின் மனைவியும் உயிரிழப்பு
ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா தாக்குதலில் உயியிழந்துள்ள நிலையில் அலி கமேனியின் மனைவியும் தற்போது உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
79 வயதான Mansoureh Khojasteh Bagherzadeh, அதி உயர் தலைவரை கொல்வதற்கு நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து சுயநினைவிழந்திருந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய குறித்த தாக்குதலில் ஈரானின் அதிஉயர் தலைவர், அவரது மகள், மருமகன், பேரப்பிள்ளை மற்றும் தற்போது மனைவி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.





