தமிழக அரசியலில் பரபரப்பு: ஓ.பி.எஸ். தி.மு.கவுடன் சங்கமம்!
தமிழகத்தின் முன்னாள் முதல்வாரன அ.தி.மு.கவின் AIADMK மிக முக்கிய தூணாக விளங்கிய ஓ.பன்னீர்செல்வம், O. Panneerselvam தி.மு.கவில் DMK இணைந்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் Stalin முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் இன்று சங்கமமானார்.
தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள், தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
75 வயதான ஓபிஎஸ் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்து வந்தவர்.
அக்கட்சியின் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணை தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக-வில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
தொடர்ந்து மீண்டும் அக்கட்சியில் இணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவர், அது பலன் அளிக்காத நிலையில் திமுக-வில் இணைந்துள்ளார்.
அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார்.





