ஆஸ்திரேலியா

9 மாதங்களுக்குள்ளேயே தலைமைப் பதவியை இழந்த ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர்!

ஆஸ்திரேலியாவில் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் Liberal Party புதிய தலைவராக ஆங்கஸ் டெய்லர் Angus Taylor தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இனி அவரே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், எதிரணி கூட்டணி தலைவராகவும் செயல்படுவார்.

கட்சியால் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை ஏற்று, கட்சியை வெற்றிபாதை நோக்கி அழைத்து செல்வதற்கு தீவிரமாக செயல்படபோவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

தலைமைப் பதவிக்காக கட்சிக்குள் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே Sussan Ley , அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

லிபரல் கட்சி தலைவராக இருந்த பீட்டர் டட்டன் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தனது தொகுதியில் தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து லிபரல் கட்சியின் தலைவராக துணைத்தலைவராக இருந்த சூசன் லே தெரிவுசெய்யப்பட்டார்.

லிபரல் கட்சி வரலாற்றில் தலைமைப் பதவிக்கு பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இதுவாக அமைந்தது.

எனினும், பதவியேற்று 9 மாதங்களுக்குள்ளேயே அவர் அரசியலில் இருந்து விடைபெற்றுள்ளார்.

எதிரணி கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவு மற்றும் கட்சிக்குள் ஏற்பட்ட முறுகல் உள்ளிட்ட காரணங்களாலேயே புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கு உள்ளக வாக்கெடுப்பை நடத்த வேண்டி ஏற்பட்டது.

உள்ளக வாக்கெடுப்பில் ஆங்கஸ் டெய்லர் வெற்றிபெற்றுள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் அறிவிப்பை சூசன் லே வெளியிட்டார்.

இதனால் சூசன் லே பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் 25 வருடகாலம் உறுப்பினராக இவர் செயல்பட்டார்.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!