50 ஆண்டுகள் வாழத் தயாராகும் சீன, ரஷ்ய தலைவர்கள்! சீனாவில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
மனிதர்களின் ஆயுளை அதிகரிப்பது தொடர்பான ஆய்வுகளைச் சீனா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளுக்கு பில்லியன் கணக்கான டொலர்களைச் சீன அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் வயதெல்லையை 150 ஆண்டுகள் வரை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஆய்வுகள் மூலம் பெற்றுள்ளதாகச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனித ஆயுளை மாற்றும் நடவடிக்கையில் ஷென்சென்னில் உள்ள லாங்வே பயோசயின்ஸ் (Longway Bioscience) என்ற முன்னணி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
மனிதர்களின் வயதை 150ஆக அதிகரிப்பது என்பது சாதாரண விடயம் என நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்பவியலாளர் லு கிங்குவா தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் புரோசியானிடின் சி1 (Procyanidin C1) என்ற சேர்மத்தை அடிப்படையாகக் கொண்ட மருந்தொன்றைத் தயாரித்துள்ளது. இது பழைய செல்களை அழித்து ஆரோக்கியமான புதிய செல்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்தினைக் கொண்டு எலிகள் மீது சோதனை மேற்கொண்டதில், அவற்றின் ஆயுள் சுமார் 10 சதவீதம் கூடியுள்ளமை தெரியவந்துள்ளது.
அதேவேளை, தமது ஆயுளை 150 ஆண்டுகளாக அதிகரிக்கும் முயற்சியில் சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடலின் போது இந்த விடயம் தவறுதலாக மைக்ரோபோன் ஊடாகக் கசிந்த நிலையில், சர்வதேச ரீதியாகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை, மனித ஆயுளை அதிகரிக்கும் தொழில்நுட்பம் ஆபத்தானது என அமெரிக்க உயிரியலாளர் டேவிட் பார்சிலாய் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





