மகள் வயது நடிகையுடன் ஜோடி போடும் நடிகர்…

60 வயதை கடந்த நடிகர் இப்போதும் சினிமாவில் சக்க போடு போட்டு வருகிறார். பார்ப்பதற்கு வயதானவர் போன்ற தோற்றம் இல்லாமல் தற்போதும் தன்னை இளமையாக வைத்துக் கொள்ள பல விஷயங்களை செய்து வருகிறார்.
மேலும் நடிகர் ஒரு பெண்ணை உருகி உருகி காதலித்த நிலையில் இவரின் சைக்கோ தனத்தால் இவரை விட்டு சென்று விட்டார். அதன் பிறகும் தற்போது வரை நடிகர் தனிமையில் தான் இருந்து வருகிறார்.
இந்த சூழலில் தன்னுடைய மகள் வயதில் உள்ள நடிகையுடன் நடிகர் ஜோடி போட்டு இருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறிவிட்டது. இதற்கு அவர் விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
அதாவது தன்னுடன் நடிக்க அந்த நடிகையோ அவரது அப்பாவோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் சும்மா உள்ள நீங்கள் ஏன் இவ்வாறு சர்ச்சையை கிளப்பி விடுவீர்கள் என்று வினவி இருக்கிறார்.
என்னதான் நடிகராக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா. இவ்வளவு சின்ன வயதுடைய நடிகையுடன் ஜோடி போட்டு நடிக்க எப்படி தான் அவருக்கு மனசு வந்ததோ என தற்போதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் அதைப் பற்றி எல்லாம் உச்ச நடிகர் கொஞ்சமும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. மேலும் நடிகர் இளம் நடிகையுடன் ஜோடி போட்ட படம் விரைவில் வெளியாக இருக்கிறது.