இலங்கை

ஒரு தலை காதலால் வந்த வினை : ஒரு பிள்ளையின் தாயிற்கு நேர்ந்தக் கதி!

வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 26 வயதுடைய நியூட்டன் தர்சினி  பிள்ளையின் தாயும், 24 வயதுடைய சிவபாலன் சுஜாந்தன் என்ற இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில்,  விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,  குறித்த பெண் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளில், குறித்த 24 வயதுடைய இளைஞர் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், குறித்த பெண் திருமணம் முடித்தும், அவர் தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இளைஞர் குறித்த பெண்ணை இடியன் துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டு கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்