தினமும் 99 புற்றுநோயாளிகள் அடையாளம்! இலங்கையில் மும்மடங்காக அதிகரிப்பு!
கடந்த 20 ஆண்டுகளில் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி, நாட்டில் 35,855 புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தினமும் 99 புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மருத்துவ நிபுணர் ஹசரேலி பெர்னாண்டோ, “கடந்த 20 ஆண்டுகளின் தரவுகளை நாம் பார்த்தால், எண்ணிக்கையில் மும்மடங்கு அதிகரிப்பைக் காண்கிறோம்.
புற்றுநோய் குறித்த பொதுமக்களிடையே அதிகரித்த விழிப்புணர்வு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் பிற கண்டறிதல் ஆராய்ச்சிகள் காரணமாகப் பதிவுகள் அதிகரித்ததையும் இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கான காரணங்களாக நாங்கள் கருதுகிறோம்.
2022 ஆம் ஆண்டின் இலங்கை தேசிய புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளின்படி, 35,855 புதிய புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவர்களில், 16,398 ஆண்களும், 19,457 பெண்களும் அடங்குவர்” எனத் தெரிவித்துள்ளார்.





