செய்தி தமிழ்நாடு

பேருந்து மீது ஆட்டோ மோதியதில் 6 பேர் பலி

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ,பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

இந்த விபத்து குறித்து அறிந்த காவல் துறையினர்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும்,இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி