இலங்கை

பேஸ்புக் விருந்தில் ஈடுபட்ட 26 பேர் அதிரடி கைது

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 26 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை, இன்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் 22 இளைஞர்களும் 4 யுவதிகளும் அடங்கினர். கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 31 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் 21 முதல் 26 வயதுக்குட்பட்ட யுவதிகள் ஆவர்.

அவர்கள் கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இன்றைய தினம் தெல்தெனி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர். சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

TK

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்