செய்தி விளையாட்டு

IPL: PBKS, GT அணிகள் இன்று மோதல்!

  • March 31, 2026
  • 0 Comments

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் உள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா செய்தி

ஈரானில் ஆட்சி மாற்றம்: ஆஸ்திரேலிய பிரதமர் கூறுவது என்ன?

  • March 31, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese நட்பு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றார். ஈரானின் ஏவுகணைத் திறனை அழித்தல் மற்றும் அணு ஆயுதப் பயன்பாட்டைத் தடுத்தல் ஆகிய அமெரிக்காவின் இலக்குகள் எட்டப்பட்டாலும், ஆட்சி மாற்றம் என்பதில் பெரும் சிக்கல் நிலவுகின்றது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். “ வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியம்.” எனவும் Anthony […]

விளையாட்டு

மண்கவ்வியது CSK!

  • March 31, 2026
  • 0 Comments

சென்னை சூப்பர் கிங்ஸ் Chennai Super Kings அணி தனது முதல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சஞ்சு சாம்சன் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 19.4 ஓவர்களில் 127 ஓட்டங்களைப் பெற்றது. […]

இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்!

  • March 31, 2026
  • 0 Comments

SriLankan Airlines Limited மற்றும் SriLankan Catering Limited ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட விலகியுள்ளார். திறைசேரி செயலாளரால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஏ.கே.டி.டி. டிமல் அரந்தர இந்த இரு நிறுவனங்களினதும் பதில் தலைவராகச் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது அதிரடி தாக்குதல்

  • March 31, 2026
  • 0 Comments

டுபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் குறித்த கப்பல் முழுமையாக எண்ணெயால் நிரப்பப்பட்டிருந்ததனால், கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை செய்தி

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை!

  • March 31, 2026
  • 0 Comments

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ Andrey Rudenko இன்று (31) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மதிப்பீடு செய்து வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் கொழும்பு வருகின்றார். இவ்விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதியையும் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட […]

உலகம் செய்தி

ஈரானுடனான போரால் 6,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

  • March 30, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலில் 6,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 121 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்த வெளியிட்டுள்ளன. அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையிலும், 16 பேர் தீவிர சிகிச்சை நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 232 பேர் புதிய காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட 27 ஆளில்லா விமானங்களையும் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் வெற்றிகரமாக […]

உலகம் செய்தி

ரஷ்ய எரிசக்தி தாக்குதல்கள் குறைக்கப்படலாம் – செலென்ஸ்கி

  • March 30, 2026
  • 0 Comments

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதை முன்னிட்டு, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தித் துறைக்கு எதிரான உக்ரைனின் தாக்குதல்களில் குறைக்குமாறு நட்பு நாடுகள் கேட்டுக்கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “ரஷ்யா உக்ரைனின் எரிசக்தியைச் சிதைக்கத் தயாராக இல்லையெனில், நாங்கள் அவர்களின் மீது தாக்குதல் நடத்தாமல் பதிலடி கொடுப்போம் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் செலென்ஸ்கி சந்திப்புகளை நிறைவு […]

உலகம் செய்தி

“மக்களைவிட பயங்கரவாதக் குழுக்களே ஈரான் அரசுக்கு முக்கியம்”

  • March 30, 2026
  • 0 Comments

ஈரான் அரசு தனது நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்துவிட்டு, பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்க்கோ ரூபியோ Marco Rubio விமர்சித்துள்ளார். ஈரான் தமது பொருளாதாரம் மற்றும் நீர் மேலாண்மையில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்காக தனது செல்வத்தைச் செலவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சரியான நேரத்தில் தகுந்த தூதரக முயற்சிகளை மேற்கொண்டிருந்தால், தற்போது நடைபெற்று வரும் இராணுவத் தாக்குதல்களைத் தவிர்த்திருக்கலாம் எனவும் Marco Rubio […]

உலகம் செய்தி

ஈரான்மீதான தடையை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

  • March 30, 2026
  • 0 Comments

ஈரானில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை 2027 ஏப்ரல் 13 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின் கீழ் 262 தனிநபர்கள் மற்றும் 53 அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.தனிநபர்களுக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அடக்குமுறைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் தொலைத்தொடர்பு கண்காணிப்பு சாதனங்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய நாடுகள் தற்போது அனுமதிப்பதில்லை. ஐரோப்பிய நிறுவனங்கள் அல்லது குடிமக்கள் இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு நிதி உதவி வழங்கவும் […]

error: Content is protected !!