இலங்கை அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் பிரச்சினை – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் முதல்வர் என்ற […]













