இலங்கை

நாடு முழுவதும் ஏறக்குறைய 5000 வீடுகள் முற்றாக அழிப்பு!

  • December 9, 2025
  • 0 Comments

டிட்வா (Ditwah) சூறாவளியால் நாடு முழுவதும் 5000  வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக  பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. சமீபத்திய புதுப்பிப்பின்படி, இதுவரை பேரிடரால் மொத்தம் 5,325 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,815 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் 767 வீடுகள் சேதமடைந்துள்ளன. கூடுதலாக, குருநாகல் மாவட்டத்தில் 476 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 415 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 404 வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் 300 வீடுகளும் முழுமையாக சேதமடைந்துள்ளன. […]

இலங்கை

மண்ணுக்குள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம்! தொடரும் சோகம்

  • December 9, 2025
  • 0 Comments

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் மண்ணுள் புதைந்துள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் குறித்த பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு பலர் மண்ணுக்குள் புதையுண்டனர். அதிலிருந்து பலரின் சடலங்கள் மீட்கப்பட்டன. எனினும், மீட்கப்படாத சடலங்களில் இருந்தே இந்த துர்நாற்றம் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பேரிடர் என்பதால், மண்ணுக்குள் அனேகமான சடலங்கள் புதையுண்டிருக்கலாம் என்பதை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவை ஏற்றுக் கொண்டார். எனினும், புதையுண்டிருக்கலாம் என நம்பப்படும் […]

ஐரோப்பா

பாலியல் குற்றச்சாட்டு – UKவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆப்கான் பிரஜைகள்!

  • December 9, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் இரண்டு ஆப்கான் இளைஞர்கள் 15 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளனர். ஜான் ஜஹான்சீப் (Jan Jahanzeb)  மற்றும் இஸ்ரார் நியாசல் (Israr Niazal), என அறியப்படும் இருவரும் லீமிங்டன் (Leamington ) நகர மையத்திற்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்ட பின் வார்விக் கிரவுன் (Warwick […]

உலகம்

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்!

  • December 9, 2025
  • 0 Comments

வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில், 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று பதிவாகியது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தினால் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அமோரிக்கு தெற்கே, இவாட் (Iwate) மாகாணத்தின் குஜி (Kuji) துறைமுகத்தில் 70 செ.மீ சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் பிராந்தியத்தின் பிற இடங்களில் […]

இலங்கை செய்தி

பேரிடரில் இருந்து மீள்வதற்கு போராடும் இலங்கை – ஜனாதிபதி கருத்து!

  • December 9, 2025
  • 0 Comments

கடன் நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பில் இருந்து மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் அதே வேளையில், பேரழிவை ஏற்படுத்திய  டிட்வா சூறாவளியில் இருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வருவதாக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியூஸ் வீக்கிற்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார். குறித்த செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர்,  வரலாற்று சிறப்புமிக்க கடன் மறுசீரமைப்பை நாங்கள் இப்போதுதான் முடித்துள்ளோம் எனவும், தற்போது கட்டுப்பாட்டை மீறிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். “ஆபரேஷன் சாகர் பந்து மூலம் இந்தியா வேகமாக […]

உலகம்

ட்ரம்பின் நம்பிக்கை – அமைதி ஒப்பந்தத்தை கடைப்பிடிக்குமா தாய்லாந்து?

  • December 9, 2025
  • 0 Comments

கம்போடியாவும், தாய்லாந்தும் தங்கள் போர் நிறுத்த உறுதிமொழிகளை “முழுமையாக மதிக்கும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். கம்போடியாவுடனான (Cambodia) சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் தாய்லாந்து இராணுவத்தினர்  நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தினர். இதில் ஒரு சிப்பாய் உள்பட நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏராளமான மக்கள் பாதுகாப்பு தேடி இடம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ட்ரம்பின் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்ட அமைதி ஒப்பந்தம் பலவீனமான நிலையை எட்டியது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள […]

இலங்கை

இறப்புகளை பதிவு செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை

  • December 9, 2025
  • 0 Comments

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இறந்தவர்களின் அல்லது காணாமல் போனவர்களின் இறப்புகளை பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் கூறுகிறது. இந்தப் பேரிடர் காரணமாக ஒரு நபர், உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் காணாமல் போயிருந்தால், அந்த காணாமல் போனவர்களின் இறப்புகளைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன ஒருவரின் மரணத்தைப் பதிவு செய்வதற்கு, தகவல் மற்றும் உண்மைகளை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரம் அடங்கிய விண்ணப்பப் […]

உலகம் முக்கிய செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை – எந்நேரத்திலும் இரத்தாகும் விசா!

  • December 9, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ட்ரம்ப் நிர்வாகம் 8,000 க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான விசாக்களை இரத்து செய்துள்ளது. இது கடந்த ஆண்டு திரும்பப் பெறப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், தாக்குதல்கள் மற்றும் திருட்டு போன்ற குற்றங்கள் விசாக்களை இரத்து செய்யப்பட்டமைக்கு ஏதுவான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கிடையே செல்லுபடியாகும் அமெரிக்க விசாக்களை வைத்திருந்த “55 மில்லியனுக்கும் அதிகமான […]

ஐரோப்பா

சைபர் தாக்குதல்கள் – ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு!

  • December 9, 2025
  • 0 Comments

ரஷ்யா மற்றும் பிற விரோத நாடுகளிடமிருந்து அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்கள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றுப்பட வேண்டும் என இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் ( Yvette Cooper) அழைப்பு விடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள் தேசிய உள்கட்டமைப்பை பலவீனப்படுத்தவும், நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், ஜனநாயகங்களில் தலையிடவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். உக்ரைனின் எதிர்காலம் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய அமைதி திட்டம் குறித்து பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் […]

இலங்கை

சிவப்பு எச்சரிக்கை : மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

  • December 9, 2025
  • 0 Comments

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை டிசம்பர் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை பாதுகாப்பான தற்காலிக மையங்களுக்கு அப்புறப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மாவட்டச் செயலாளர்களுக்கு தெரிவித்துள்ளது. இந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர், […]

error: Content is protected !!