புகலிடக் கோரிக்கையாளர்கள் மூலம் பிரித்தானியாவுக்கு போதைப்பொருள் அச்சுறுத்தல்.
பிரித்தானியாவில் தி டெலிகிராஃப் (The Telegraph) பத்திரிகை வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையின்படி, சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மூலமாக, நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் சடுதியாக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உள்துறை அலுவலகம் மற்றும் தேசிய குற்றவியல் நிறுவன அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது. பிரித்தானியாவிற்குள் வட பிரான்ஸிலிருந்து வரும் சில புகலிடக் கோரிக்கையாளர்கள், போதைப்பொருள் வில்லைகளை விழுங்கி, அவற்றை பிரித்தானியாவில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களிடம் ஒப்படைப்பதற்கு இணங்கினால், […]












