இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் போராட்டம் முன்னெடுப்பு!

  • December 10, 2025
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கு, கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறு, நீதி கோரும் பதாதைகளுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கைதிகள் விடுதலை, பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் குரல் எழுப்பட்டது. அத்துடன், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் […]

இலங்கை செய்தி

உயர் நீதிமன்ற நீதியரசராக கிஹான் ஹிமான்ஷு குலதுங்க நியமனம்

  • December 10, 2025
  • 0 Comments

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கே.எம். கிஹான் ஹிமான்ஷு குலதுங்க, உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் இன்று பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

ஐரோப்பா

பிராம் புயல் எதிரொலி – பிரித்தானியாவின் பல பகுதிகளில் மின்துண்டிப்பு!

  • December 10, 2025
  • 0 Comments

பிரித்தானியாவை தாக்கிய பிராம் புயல் காரணமாக பல வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு அயர்லாந்தின் பல பகுதிகளில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பல பகுதிகளுக்கும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த எச்சரிக்கைகள் நாளை வரை நீடிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பிராம் புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 119 கிமீ (74 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி […]

இலங்கை செய்தி

முன்பள்ளிகள் திறப்பு: சிறுவர் அபிவிருத்தி செயலகம் அறிவிப்பு.

  • December 10, 2025
  • 0 Comments

சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஆரம்பகாலச் சிறுவர் அபிவிருத்திச் செயலகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து முன்பள்ளிகளும் (Preschools) ஆரம்பகாலச் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களும் 2025 டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும். அண்மையில் ஏற்பட்ட அவசரகால அனர்த்த நிலை காரணமாக இந்த நிலையங்கள் முன்னர் மூடப்பட்டிருந்தன. பிள்ளைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நிலையங்களின் பாதுகாப்பு மதிப்பீடுகள் நிறைவு செய்யப்பட்ட பின்னரே […]

இலங்கை செய்தி

தித்வா புயல் சேதம்: MIT, மைக்ரோசொப்ட் உதவியுடன் தரவு சேகரிப்பு ஆரம்பம்.

  • December 10, 2025
  • 0 Comments

தித்வா (Ditwah) புயலினால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தரவுகளையும் தகவல்களையும் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்துள்ளார். தேசிய திட்டமிடல் திணைக்களம் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்தத் தகவல்கள் பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து தொகுக்கப்படும் என்று நிதி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். தரவுகளை மேலும் துல்லியமாகச் சேகரிப்பதற்காக, பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் குழுக்கள் நேரடியாகச் சென்று […]

ஐரோப்பா

உக்ரைன் போர் களத்தில் பிரித்தானிய வீரர் ஒருவர் உயிரிழப்பு!

  • December 10, 2025
  • 0 Comments

உக்ரைனில் பணியில் இருந்த பிரித்தானிய இராணுவ வீரர் ஒருவர் கடந்த ஒன்பதாம் திகதி  உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராசூட் படைப்பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கார்போரல் ஜார்ஜ் ஹூலி  (Lance Corporal George Hooley) என்ற 28 வயதுடைய வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் இராணுவம் புதிய ஆயுதத்தை சோதனை செய்துகொண்டிருந்தபோது, நடந்த “துரதிர்ஷ்டவசமான விபத்தில்” அவர் உயிரிழந்ததாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக ஹூலியின் துணிச்சலையும், நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவையையும் எடுத்துரைத்த […]

இலங்கை

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

  • December 10, 2025
  • 0 Comments

சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) வெளியிடப்பட்டது. நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

உலகம்

சவுதி அரேபியாவை மூழ்கடித்த வெள்ளம் – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

  • December 10, 2025
  • 0 Comments

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபிய ஊடகங்களின் அறிக்கையின்படி, கனமழைக்குப் பிறகு கடுமையான வெள்ளம் நகரத்தை மூழ்கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்  தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மீட்பு மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது, வெள்ளம் ஏற்படும் பகுதிகளைத் தவிர்த்து வீட்டிற்குள் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும், தண்ணீர் வடியும் வரை […]

gotabaya rajapaksa இலங்கை செய்தி

கோட்டாபயவுக்கு யாழ் நீதிமன்றம் உத்தரவு: கொலை மிரட்டலை உறுதிப்படுத்துக!

  • December 10, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் எதிர்கொள்ளும் கொலை மிரட்டல் தொடர்பான சத்தியக்கடதாசியை (Affidavit) 2026 பெப்ரவரி 6ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவறிற்கு ஏட்பட்டுள்ள கொலை மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சார்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மை குறித்து எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்துவதே இந்த சத்தியக்கடதாசியின் நோக்கமாகும். சுமார் 14 வருடங்களுக்கு முன்னர் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் விந்தணுக் கொடையாளரால் பாதிக்கப்பட்டுள்ள 200 குழந்தைகள்!

  • December 10, 2025
  • 0 Comments

டென்மார்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றத்துடன் வாழும் நபர் ஒருவர் விந்தணுக்களை தானம் செய்ததன் காரணமாக சுமார் 200 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தானம்  செய்த குறித்த நபர் TP53 என்ற மரபணு மாற்றத்தை கொண்டிருந்ததாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது 60 வயதிற்கு முன்பே புற்றுநோய் உருவாகும் அபாயத்தை 90 சதவீதம் வரை அதிகரிக்கிறது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நன்கொடையாளர் ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சில குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. […]

error: Content is protected !!