இலங்கை

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

  • December 12, 2025
  • 0 Comments

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் செலுத்திய ஜீப் வண்டி நேற்று இரவு மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், சப்புகஸ்கந்த பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை

ஜே.வி.பி தலைவர்கள் பலர் V8 வாகனங்களையே பயன்படுத்துகின்றனர் – அர்ச்சுனா எம்.பி கடும் குற்றச்சாட்டு

  • December 12, 2025
  • 0 Comments

ஜனாதிபதி முதல் பெரும்பாலான ஜே.வி.பி தலைவர்கள் V8 வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஜே.வி.பி அரசாங்கத்தை நம்பும் கட்சி உறுப்பினர்களுக்கு இவை பற்றி தெரியாது என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பயன்படுத்து் வாகனம் வேறு யாரிடமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ”எம்.பிகளுக்கான வாகன இறக்குமதியை நிறுத்த வேண்டும். ஒருவர் எம்.பி.யாகவும் அமைச்சராகவும் ஆவதால் சூப்பர் வாகனங்கள் தேவையில்லை. இருப்பினும், ஜனாதிபதி தொடங்கி அரசாங்கத்தில் பலர் V8 […]

செய்தி வாழ்வியல்

உடல் எடையைக் குறைக்க 4 ‘எளிய’ மற்றும் பயனுள்ள வழிகள்!

  • December 12, 2025
  • 0 Comments

1. புரதச்ச த்து நிறைந்த காலை உணவு (Protein-Rich Breakfast) இதனை சாப்பிடுவதன் மூலம் நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கவும் புரதச்சத்து உதவுகிறது. உதாரணமாக முட்டை, ஓட்ஸ் (ஓட்மீல்), நட்ஸ் மற்றும் விதைகள் (சியா விதை, ஆளி விதை), பயறு வகைகள் (பருப்பு, கொண்டைக்கடலை), குயினோவா கஞ்சி, மத்தி மீன். இவைகளை சாப்பிடுவதால் வயிறு நிறைவாக இருப்பது போன்ற உணர்வைத் தந்து, சிற்றுண்டி (Snacks) சாப்பிடும் ஆவலைக் குறைக்கும். 2. நார்ச்சத்து […]

ஆசியா

உலகின் முதல் தானியங்கிப் கப்பல் சேவை ஜப்பானில் ஆரம்பம்

  • December 12, 2025
  • 0 Comments

உலகில் முதன்முறையாகத் தானியங்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயணிகள் கப்பல் சேவை ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஒகாயாமா, ஷோடோஷிமா தீவுக்கு இடையே இந்த கப்பல் சேவை நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொலைதூர தீவுகளில் வசிக்கும் மக்களின் போக்குவரத்தை இது உறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், கடல் சார்ந்த தளவாடங்களை நிலைப்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் இந்தத் தானியங்கி முறை உதவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் 30% நிலப்பரப்பில் மண்சரிவு அபாயம் – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  • December 12, 2025
  • 0 Comments

இலங்கையில் 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர இதனை தெரிவித்தார். “நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 34% மக்கள் வசிக்கின்றனர். அந்த நிலப்பரப்பு சுமார் 20,000 சதுர கிலோமீற்றர் வரை பரந்துள்ளது. ‘டித்வா’ புயலைத் […]

இலங்கை

அனைத்து மதுபான உரிமக் கட்டணங்கள் 100 சதவீதத்தால் அதிகரிப்பு!

  • December 12, 2025
  • 0 Comments

அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் இன்று முதல் 100 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 05 ஆம் திகதி ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருடாந்திர கலால் வரி, தொழில்துறை வரிக்கான ஒரு முறை கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 04 நாடுகளை பிரிக்க முயற்சிக்கிறதா அமெரிக்கா?

  • December 12, 2025
  • 0 Comments

ட்ரம்ப் நிர்வாகம் ஆஸ்திரியா(Austria), ஹங்கேரி (Hungary) , இத்தாலி  (Italy) மற்றும் போலந்தை (Poland) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக்கி அமெரிக்காவின் பார்வையில் வைக்க  முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. Defense One அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. டிசம்பர் 04 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட 29 பக்க அறிக்கையால்,  ஐரோப்பா முழுவதும் பல கேள்விகள் எழுந்துள்ளன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இடம்பெயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியால் “சிதைந்து வருகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், ஐரோப்பா […]

உலகம்

பாரிய அளவு வீழ்ச்சியடையும் சீனாவின் மக்கள் தொகை – ஐ.நா கணிப்பு!

  • December 12, 2025
  • 0 Comments

சீனாவில் அடுத்த 10 ஆண்டுகளில் சனத்தொகை அளவு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை சுமார் 140 மில்லியனாகவும், 2100 ஆம் ஆண்டுக்குள் தோராயமாக 760 மில்லியனாகவும் குறையக்கூடும் என்று ஐ.நா. மதிப்பீடுகள் காட்டுகின்றன. குறைந்து வரும் பிறப்பு விகிதம் என்பது சுருங்கி வரும், வயதான மக்கள்தொகையைக் குறிக்கிறது. இதன் விளைவாக, குறைவான தொழிலாளர்கள் அதிக ஓய்வு பெற்றவர்களை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் இதனால் சமூக நலத்திட்டங்கள் பாதிக்கப்படும். குறிப்பாக […]

இலங்கை செய்தி

திருகோணமலை சலப்பையாறு: வீதி ஓரத்தில் வயோதிபப் பெண் சடலம்

  • December 12, 2025
  • 0 Comments

திருகோணமலை -சலப்பையாறு பகுதியில் வீதி ஓரத்தில் வயோதிப பெண்ணொருவரின் இன்று (12) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் குச்சவெளி சலப்பையாறு பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி செல்வராஜா (56வயது) எனவும் தெரியவந்துள்ளது. பக்கத்து வீட்டுக்கு சென்று வராத போது கணவர் தேடிச்சென்ற போது வீதியோரத்தில் குளிர் காரணமாக போத்திச் சென்ற பெட்சீட் வீதி ஓரத்தில் இருந்ததாகவும் சற்று தூரத்தில் அவர் வீசி எறியப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த இடத்தில் தடய பொருட்களாக கண்ணாடி துண்டுகள் […]

உலகம்

‘ஒபாமாகேர்’ திட்டம் முடிவுக்கு வருகிறது – அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • December 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஒபாமாகேர் காப்பீட்டுத் திட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கான மானியம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் போட்டி போட்டு செயல்படுவதால் அந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்கான மானியத்தை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் ஒன்று மற்றொன்றுக்குப் போட்டியாக உத்தேச திட்டங்களை தாக்கல் செய்தன. ஆனால் இரு திட்டங்களையும் இரு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர். இதனால் ஒபாமாகேர் திட்டத்திற்கான மத்திய அரசாங்கத்தின் மானியம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியுடன் காலவதியாக […]

error: Content is protected !!