ராஜஸ்தானில் திருமண வற்புறுத்தலால் காதலியை கொலை செய்த நபர்
37 வயதுடைய ஒரு பெண் தனது காதலனை சந்திக்க 600 கி.மீ தூரம் காரில் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது காதலரான பள்ளி ஆசிரியர், இரும்பு கம்பியால் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் உள்ள அங்கன்வாடி மேற்பார்வையாளரான முகேஷ் குமாரி, 10 வருடங்களுக்கு முன்பு தனது கணவரிடமிருந்து பிரிந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில், பார்மரில் உள்ள பள்ளி ஆசிரியரான மனாரமை பேஸ்புக்கில் தொடர்பு கொண்டார். இருவரும் சந்திக்கத் […]













