ஆசியா

வெற்றிகரமாக ஏவுகணை சோதனை செய்த பாகிஸ்தான்

  • May 4, 2025
  • 0 Comments

பஹேல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வெற்றிகரமாக ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்துள்ளது. 450 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் “அப்தாலி ஆயுத அமைப்பு” என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, ‘சிந்து’ பயிற்சியின் ஒரு பகுதியாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத அமைப்பு சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹேல்காமில் ஒரு நேபாள சுற்றுலாப் பயணியையும் 26 பொதுமக்களையும் கொன்றது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா சிந்து நதி […]

உலகம்

உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Apple நிறுவனத்தின் விசேட எச்சரிக்கை

  • May 4, 2025
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Apple நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Appleஇன் AirPlay அம்சத்தில் இருந்த பல கடுமையான பாதுகாப்பு பாதிப்புகள் உள்ளதென Oligo Security பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர். இது AirBorne என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம், ஹேக்கர்கள் iPhone, Mac மற்றும் smart TV போன்ற சாதனங்களைக் கட்டுப்படுத்தவும், ரிமோட் மென்பொருளைப் பயன்படுத்தி கையாளுதல்களைச் செய்யவும் முடியும் என்பதும் தெரியவந்தது. microphone பயன்படுத்தி தனிப்பட்ட தரவைப் பெறவும், தீம்பொருளைத் தொடங்கவும், உரையாடல்களைக் கேட்கவும் ஏர்போர்னைப் […]

வாழ்வியல்

மைக்ரோபிளாஸ்டிக் துகள்களால் மூளை பாதிக்கும் ஆபத்து

  • May 4, 2025
  • 0 Comments

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பிளாஸ்டிக் பயன்பாடு இன்றியமையாததாக ஆகி வருகிறது. அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களை பல்வேறு விதமான தேவைகளுக்காக பயன்படுத்துகிறோம். இதில் நமது உணவு பொருட்களுக்கான பிளாச்டிக் கலன்களும் தண்ணீர் பாட்டில்களும் அடங்கும். இதன் மூலம் இன்று, நாம் சுவாசிக்கும் காற்றிலும், குடிக்கும் தண்ணீரிலும், உண்ணும் உணவிலும் மைக்ரோபிளாஸ்டிக்கள் கரைந்து போயுள்ளன. ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பிளாஸ்டிக் துகள்கள் கண்ணுக்குத் தெரியாத இந்த பிளாஸ்டிக் துகள்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்திற்கும் பெரும் […]

உலகம்

கடவுச்சீட்டுடன் எதிஹாட் விமானத்தில் பயணித்த பருந்து – ஆச்சரியத்தில் பயணிகள்

  • May 4, 2025
  • 0 Comments

மொரோக்கோவுக்குச் சென்ற நபர் அவருடைய பருந்தை எதிஹாட் விமானத்தில் எடுத்துச்சென்றது மக்களை வியக்கவைத்துள்ளார். அந்த பருந்துக்கு கடவுச்சீட்டும் உள்ளது. அந்தப் பருந்து ஸ்பெயினைச் சேர்ந்த ஆண் பருந்து என தெரியவந்துள்ளது. மேலும் வேறு எந்தெந்த நாடுகளுக்குப் பருந்து சென்றிருக்கிறது என்ற தகவலும் கடவுச்சீட்டில் உள்ளது. “பறவை நான் சென்ற நாடுகளை விட அதிகமான நாடுகளுக்குச் சென்றிருக்கிறது” என விமான பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். விலங்குகளுக்கு இப்படித்தான் மரியாதை செலுத்தவேண்டும் என மற்றுமொருவர் குறிப்பிட்டுள்ளார். வேறு சிலர் பறவைகளுக்குக் […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடன்களை தடுக்கும் முயற்சியில் இந்தியா

  • May 4, 2025
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் மானியங்களை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு பணம் வழங்குவது பயங்கரவாதத்தை தூண்டுகிறது என்று இந்தியா கூறியுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கான அணுகலும் இந்தியாவில் தடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாகிஸ்தான் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்களான […]

அறிவியல் & தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பறிபோகும் வேலைகள் – ஐ.நா. எச்சரிக்கை!

  • May 4, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், உலகில் நாற்பது சதவீதப் பணிகள் பாதிக்கப்படக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், உலகளவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வேலைகளில் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் குறைந்த ஊதிய வேலைகளில் செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தை உருவாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் சில வேலைகளில் […]

விளையாட்டு

ஊக்க மருந்து பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்ட ககிசோ ரபாடா இடைநீக்கம்

  • May 4, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா பொழுதுபோக்கிற்காக ஊக்க மருந்தினை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கமைய கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ககிசோ ரபாடா குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (South African Cricketers’ Association) ஊடாக ரபாடா வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடியதன் பின்னர், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார். இந்தநிலையில் குறித்த […]

இலங்கை

பல பகுதிகளில் மாலை மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

  • May 4, 2025
  • 0 Comments

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிளவான […]

ஆசியா

இந்திய இராணுவம் குறித்த பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிடும் போலியான செய்திகள்

  • May 4, 2025
  • 0 Comments

இந்திய இராணுவ அதிகாரிகள் குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நாளுக்குநாள் விரிசலடைந்து போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில், இந்தியாவின் முக்கிய ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்து அவர்களைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் பரப்பி வருகின்றன. இந்திய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை அரச மற்றும் தனியார் துறையினருக்கு 6ஆம் திகதி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

  • May 4, 2025
  • 0 Comments

எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதேநேரம், பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!