மோசடி வழக்கு: முன்னிலையாக நடிகர் மகேஷ் பாபுக்கு ED அழைப்பாணை
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. நிலச்சொத்து சந்தை நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கில் ஏப்ரல் 28ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் முன்னிலையாக வேண்டுமென அவருக்கு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய் சூர்யா, சுரானா ஆகிய இரு நிலச் சொத்துச் சந்தை நிறுவனத்தின் புதிய திட்டங்களை ஆதரித்து நடிகர் மகேஷ் பாபு விளம்பரம் செய்திருந்தார்.இதற்காக, கிட்டத்தட்ட 59 மில்லியன் ரூபாயைப் பெற்றதாகக் கூறப்பட்டது.இதில் ரூ.34 மில்லியனைக் காசோலையாகவும் […]













