இந்தியா: 357 இணைய விளையாட்டுத் தளங்கள்,2,400 வங்கிக் கணக்குகளை முடக்கிய நிதியமைச்சு
பொருள் சேவை வரி (GST) புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 357 சட்டவிரோத வெளிநாட்டு இணைய விளையாட்டுத் தளங்களை முடக்கியுள்ளதாகவும் ஏறத்தாழ 2,400 வங்கிக் கணக்குகளைப் பற்றுகை செய்துள்ளதாகவும் இந்திய நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்திப்பட நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் அத்தகைய தளங்கள் குறித்த விளம்பரங்களில் தோன்றினாலும் அவற்றைப் பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்களை அமைச்சு எச்சரித்து இருக்கிறது. அத்துடன், ஏறக்குறைய 700 இணைய விளையாட்டு நிறுவனங்கள் GST புலனாய்வுத் தலைமை இயக்ககத்தின் (DGGI) கண்காணிப்பில் உள்ளன. அவை, முறையாகப் பதிவுசெய்யாமல், […]













