இலங்கை செய்தி

தமிழரசுக் கட்சி பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம்

  • December 28, 2024
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும், இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானமும் செயற்படுவார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இருந்தாலும் கூட முதலாவதாக தலைவர் விடயம் […]

இலங்கை செய்தி

விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தத்திற்கான காரணத்தை ரணில் விளக்குகிறார்

  • December 28, 2024
  • 0 Comments

2001 ஆம் ஆண்டு அன்றைய பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்புடன் போர் நிறுத்த உடன்படிக்கையை மேற்கொள்ள நேர்ந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் அதல் பிஹாரி வாஜ்பாயிக்காக நேற்று (27) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 7வது அதல் பிஹாரி வாஜ்பாய் விரிவுரையில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தமக்கும் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக […]

இந்தியா செய்தி

பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து

  • December 28, 2024
  • 0 Comments

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவின் காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான பயண டிக்கெட்டுகளை புதுப்பித்துக் கொள்ள விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக விமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நெடுஞ்சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டதால் நக்ரோடா மற்றும் உதம்பூரிலிருந்து, காஷ்மீர் செல்லும் வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. நெடுஞ்சாலையில் இருந்து இயந்திரங்களைக் கொண்டு பனியை அகற்றும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். […]

செய்தி விளையாட்டு

இலங்கை Vs நியூசிலாந்து : நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி

  • December 28, 2024
  • 0 Comments

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 173 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 […]

இலங்கை செய்தி

சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் பணிப்புரை

  • December 28, 2024
  • 0 Comments

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், […]

உலகம் செய்தி

ரஷ்யாவிற்காக போராடி வடகொரிய இராணுவ வீரனை உக்ரைன் இராணுவம் கைப்பற்றியது

  • December 28, 2024
  • 0 Comments

வடகொரியாவைச் சேர்ந்த காயமடைந்த இராணுவ வீரர் ஒருவர் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென் கொரிய செய்தி நிறுவனமான Yonhap படி, இது வெள்ளிக்கிழமை இரவு தென் கொரிய உளவுத்துறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை, ‘நட்பு தேசத்தின் உளவுத்துறையுடன் தகவல் பரிமாற்றம்’ மூலம், அவர் பிடிபட்டதை உறுதிப்படுத்த முடிந்தது என்று எழுதுகிறது. சிப்பாய் சிறைபிடிக்கப்பட்டபோது காயமடைந்ததாக உளவுத்துறை எழுதுகிறது, ஆனால் அவருக்கு எப்படியான காயங்கள் ஏற்பட்டன என்பதைக் […]

உலகம் செய்தி

ரஷ்ய வான்வெளியில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதற்கு புடின் மன்னிப்பு கேட்டார்

  • December 28, 2024
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலில் மன்னிப்புக் கோரல் இடம்பெற்றிருக்க வேண்டும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, புடின் விமான விபத்தை ஒரு ‘சோக சம்பவம்’ என்று அழைத்திருக்க வேண்டும். சனிக்கிழமையன்று ஒரு செய்திக்குறிப்பில், கிரெம்ளினில் உள்ள அரசாங்கம், உக்ரேனிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான நேரத்தில், Grozny நகரில் விமானம் தரையிறங்க முயன்றதாக கூறுகிறது. ரஷ்ய வான் பாதுகாப்பு படை இந்த தாக்குதல்களை செய்யவில்லை என்று , […]

உலகம்

12 இத்தாலிய போர் விமானங்களை வாங்கும் ஆஸ்திரியா

ஆஸ்திரியா 2020 ஆம் ஆண்டின் இறுதியில் பணிநீக்கம் செய்யப்பட்ட சாப் 105 விமானங்களுக்குப் பதிலாக 12 இத்தாலிய தயாரிப்பான M-346 FA போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவ ஆதாரங்களை மேற்கோள் காட்டி, செய்தித்தாள் க்ரோன், இத்தாலியின் லியோனார்டோ (LDOF.MI) தயாரித்த விமானங்களுக்கு சனிக்கிழமையன்று இத்தாலிய பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளது, ஒப்பந்தம் தற்போது இத்தாலிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று ஆஸ்திரிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது, விமானத்தை வாங்க […]

இலங்கை செய்தி

யாழில் இளம் விரிவுரையாளர் உயிரிழப்பு

  • December 28, 2024
  • 0 Comments

புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாடவிரிவுரையாளர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சர்ஜனா கருணாகரன் வயது 34 என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு உயிரிழந்துள்ளார் . இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் செய்தி

மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

  • December 28, 2024
  • 0 Comments

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் உயிரிழந்தார். திடீர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். […]