பொழுதுபோக்கு

மகனின் திருமணத்தை புறக்கணித்தாரா நாகர்ஜுனாவின் முதல் மனைவி?

  • December 8, 2024
  • 0 Comments

நடிகர் நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. லட்சுமியை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார் நாகார்ஜுனா. லட்சுமியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். இவரது தந்தை ராமநாயுடு சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் வெங்கடேஷின் உடன் பிறந்த சகோதரி தான் லட்சுமி. பாகுபலி நாயகன் ராணா டகுபதியும் லட்சுமிக்கு சொந்தம் தான். […]

ஐரோப்பா

இறுதி சடங்கின்போது அசைந்த உடல் : அதிர்ச்சியில் ஸ்பெயின் மருத்துவர்கள்!

  • December 8, 2024
  • 0 Comments

ஸ்பெயினில்   இறுதி சடங்கொன்றின்போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபரின் உடல் அசைந்தமையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஜுவான் மார்ச் டி புன்யோலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் மஜோர்கன் தலைநகர் பால்மாவில் உள்ள சோன் வாலண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இறுதி சடங்கின்போது அவரது உடல் அசைந்த நிலையில் துணை மருத்துவர்கள் அவர் உயிருடன் இருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஸ்பெயின் பொலிஸார் […]

இலங்கை

இலங்கை: ஸ்ரீபாத யாத்திரை டிசம்பர் 14ஆம் திகதி ஆரம்பம்

2024/25 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீபாத யாத்திரை காலம் டிசம்பர் 14 ஆம் திகதி உந்துவப் பௌர்ணமி தினத்தன்று கல்பொத்தாவல ஸ்ரீபாத ரஜமஹா விகாரையில் இருந்து புனிதப் பொட்டலங்கள், தெய்வத்தின் உருவம் மற்றும் அரச அலங்காரம் ஆகியவற்றை ஊர்வலமாக ஸ்ரீ பாதஸ்தானத்திற்கு எடுத்துச் சென்ற பின்னர் ஆரம்பமாகும். இரத்தினபுரி, அவிசாவளை, ஹட்டன், நல்லதன்னிய பாதை, இரத்தினபுரி – பலபத்கல பாதை, குருவிட்ட – எரத்தின பாதை மற்றும் பலாங்கொடை – பகவந்தலாவ பாதை வழியாக நான்கு உடைமைகளில் இவை […]

இலங்கை

கடலுக்கு செல்ல வேண்டாம் : இலங்கையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

  • December 8, 2024
  • 0 Comments

தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 60 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் […]

மத்திய கிழக்கு

அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்த சிரிய எதிர்ப்புப் போராளிகள்! அடுத்து என்ன?

தெற்கு சிரியாவின் டெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளை “சிரியா” போராட்ட குழுவினர் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசுப் படைகளுடன் நடந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பிறகு உள்ளூர் கிளர்ச்சிக் குழுவினர் பல்வேறு ராணுவ தளங்களைப் கைப்பற்றிவிட்டதாக பிரிட்டனை சேர்ந்த போர் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு வடக்கு சிரியாவில் உள்ள “சிரியா” போராட்ட குழுவினர் அரசுக்கு எதிராக திடீர்த் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையிலான, கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக […]

இலங்கை

இலங்கையில் விற்பனைக்காக வைத்திருந்த வலம்புரிகளுடன் நால்வர் கைது!

  • December 8, 2024
  • 0 Comments

இலங்கையில் 04 வலம்புரிகளை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 41 வயது மற்றும் 42 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

ஜப்பானிடமிருந்து சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு

நாட்டில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட அவசரகால பொருட்கள் சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தன. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Isomata Akio உத்தியோகபூர்வமாக உள்ளூர் அதிகாரிகளிடம் பொருட்களை கையளித்தார். வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாவட்ட செயலாளர்கள் மூலம் நிவாரணப் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 140,000இற்கும் அதிகமானவர்களுக்கு மின் துண்டிப்பு : இருவர் பலி!

  • December 8, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் தாராக் புயல் நிலைமை காரணமாக பலத்த காற்று வீசிவருகின்றது. இந்நிலையில் மரங்கள் வாகனங்கள் மீது விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்காஷயரில் உள்ள லாங்டன் அருகே 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் பர்மிங்காம் பகுதியில் நபர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. தர்ராக் புயலால் பிரிட்டன் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால்,  140,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரத்தை இழந்து தவிப்பதாக கூறப்படுகிறது.  

ஐரோப்பா

ட்ரம்ப், மக்ரோன் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகிய மூன்று ஜனாதிபதிகள் மும்முனை சந்திப்பு

டொனால் ட்ரம்ப் – இம்மானுவல் மக்ரோன் – வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகிய மூன்று ஜனாதிபதிகள் சனிக்கிழமையன்று மும்முனை சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டனர். நோர்து-டேம் திறப்பு விழாவுக்காக வருகை தந்துள்ள அமெரிக்க மற்றும் உக்ரேனிய ஜனாதிபதிகளை வரவேற்ற ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இருவரையும் சந்தித்து உரையாக வைத்துள்ளார். நவம்பர் 5 அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டிரம்ப் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். டொனால் ட்ரம்ப் – இம்மானுவல் மக்ரோன் சந்திப்பானது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு […]

ஆப்பிரிக்கா இன்றைய முக்கிய செய்திகள்

சிரியாவில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் : கைதிகள் அனைவருக்கும் விடுதலை!

  • December 8, 2024
  • 0 Comments

சிரியாவில் அதிபர் பஷார் அசாத்தின் கொடூரமான ஆட்சி இன்று திடீரென கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது. இந்நிலையில் அசாத் தூக்கியெறியப்பட்டதாகவும், சிறைகளில் உள்ள கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு குழுவினரின் வீடியோ அறிக்கையை சிரிய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதன் மூலம் அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தமை தெளிவாக தெரியவருகிறது. டமாஸ்கஸ் விமான நிலையம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிரிய பிரதம மந்திரி முகமது காசி ஜலாலி, அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு “தன் கையை நீட்ட” தயாராக […]