மதுபான உரிமம் குற்றச்சாட்டு – பதில் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில்
கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி முன்னாள் ஜனாதிபதி மதுபான உரிமம் எதனையும் வழங்கவில்லை என ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட புதிய மதுபான அனுமதிப்பத்திரத்தின் மூலம் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் அரசாங்கம் 3.1 பில்லியன் வருமானத்தை பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 19 ஆகஸ்ட் 2024 அன்று தேர்தல் ஆணையம் கலால் ஆணையர் ஜெனரலுக்கு அனுப்பிய கடிதத்தில் செய்யப்பட்ட பரிந்துரைகளின் மூலம் […]













