பிரித்தானியா நோக்கி ஆபத்தான பயணம் – கடலில் தத்தளித்த 120 அகதிகள் கடலில் இருந்து மீட்பு
பிரித்தானியா நோக்கி ஆபத்தான பயணம் மேற்கொண்ட 120 அகதிகள் கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆங்கிலக் கால்வாயூடாக பயணிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை நோர் மற்றும் பா-து-கலே மாவட்டங்களின் கடற்பிராந்தியம் வழியாக பல்வேறு சட்டவிரோத பயணங்கள் இடம்பெற்றன. முதலாவது படகு 52 பேரை ஏற்றியவாறு பயணித்த நிலையில், படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு அகதிகள் கடலில் தத்தளிக்க தொடங்கினர். அவர்களை CROSS Gris-Nez அமைப்பினர் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இரண்டாவது படகில் […]













