மத்திய கிழக்கு

பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்காக ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் டெல் அவிவ் நகரில் போராட்டம்

  • December 15, 2024
  • 0 Comments

காஸாவில் ஹமாஸ் படையினரிடம் 14 மாதங்களுக்கு மேலாக பிணைக் கைதிகளாக உள்ளவர்களை மீட்க வேண்டும் என்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சனிக்கிழமை (டிசம்பர் 14) நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணி இஸ்ரேலிய நடிகர் லியோர் அ‌ஷ்கெனாசியும் கலந்துகொண்டார். “நாம் தோற்றுவிட்டோம் என்பதை ஒப்புக்கொண்டு, பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார். தமது இரண்டு மகன்களும் இன்னும் பிணைக் கைதிகளாக காஸாவில் உள்ளதாக ஜிக் ஹார்ன் என்னும் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் மரணம் – நிறுவனத்திற்கு 750,000 டொலர்கள் அபராதம்

  • December 15, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா – விக்டோரியா மாநிலத்தில் பழம் வளர்க்கும் நிறுவனம் ஒன்று 750,000 டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வடக்கு விக்டோரியாவில் உள்ள ஸ்வான் மலைக்கு அருகில் அமைந்துள்ள Cutri Fruit நிறுவனத்திற்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் Cutri Fruit நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணிபுரியும் போது உழவு இயந்திரம் மோதி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலேயே […]

ஐரோப்பா செய்தி

ஒரு மாதத்திற்குள் புலம்பெயர்ந்தோருக்கு வேலை விசாவை வழங்கும் ஐரோப்பிய நாடு

  • December 15, 2024
  • 0 Comments

போர்த்துக்கலில் ஒரு மாதத்திற்குள் புலம்பெயர்ந்தோருக்கு வேலை விசாவை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. போர்த்துக்கலில் விசா பெறுவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தோருக்கான செயல்முறை துரிதப்படுத்தப்படும் என்று அமைச்சர் António Leitão Amaro உறுதியளித்தார். உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, வெளிநாட்டினர் போர்த்துக்கல் விசா பெற காத்திருக்கும் நேரம் கணிசமாக அதிகரித்துள்ளது, குறிப்பாக பிரேசிலில் இருந்து வருபவர்களுக்கு, இது சில நேரங்களில் ஆறு மாதங்களாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து நபர்களும் […]

பொழுதுபோக்கு

புழுகித் தள்ளிய நயன்தாரா.. வண்டவாளத்தை போட்டுடைத்த பத்திரிக்கையாளர்

  • December 15, 2024
  • 0 Comments

சமீபத்தில் நயன்தாரா கொடுத்த பேட்டி தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக். லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு வேண்டாம் என்றும் எல்லாரிடமும் கெஞ்சி கேட்டும் அப்படி போடுவதையும், கூப்பிடுவதையும் நிறுத்த மறுக்கிறார்கள் என மன்றாடியுள்ளார் நயன்தாரா. இது நயன்தாரா வெளியில் அப்பட்டமாய் கூறும் பொய் என மூத்த பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் தெரிவித்துள்ளார். குழாயடி சண்டை போல் இந்த பட்டத்துக்கு அவரும் நடிகை திரிஷாவும் ஒரு காலத்தில் சண்டை போட்டு உள்ளார்கள். நயன்தாரா படம் […]

செய்தி

சூரிய ஒளியை பார்க்க முடியாமல் தவிக்கும் பிரான்ஸ் தலைநகர் மக்கள்

  • December 15, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 12 மணிநேர சூரிய ஒளி மாத்திரமே பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து இதுவரை 12 மணி நேரத்திற்கு மேல் மக்கள் சூரிய ஒளியை பார்க்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது. டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரையான முதல் 11 நாட்களில் வெறுமனே 12 மணிநேரங்கள் மாத்திரமே சூரிய ஒளி பதிவாகியுள்ளது. 1991 – 2020 காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் இது 88 சதவீத வீழ்ச்சியாகும். முன்னதாக, […]

இலங்கை செய்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆபத்தா? பொலிஸார் விளக்கம்

  • December 15, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் எந்த விதத்திலும் சமரசம் செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இல்லாதொழிக்கும் கொள்கை முடிவிற்கு அமையும். பொலிஸ் ஊடகப் […]

இலங்கை

ஜனவரி மாதத்தில் பயணம் செய்வதற்கு உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை

  • December 15, 2024
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வெளிநாட்டு பயணங்களுக்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் இலங்கை முன்னணியில் உள்ளது. CN Traveller வழங்கிய அறிக்கைகளின்படி, ஜனவரி 2025 இல் வெளிநாட்டு பயண திட்டமிடுபவர்களில் மூன்றாவது சிறந்த நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, 2025-ம் ஆண்டு வருகை தரும் சிறந்த நாடுகளில் பிலிப்பைன்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த தரவரிசையின்படி, இத்தாலியின் மலைப் பிரதேசமான டோலமைட்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளதுடன், வெப்பநிலை, இயற்கை அழகு மற்றும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் அகதிகள் முகாமில் பயங்கர துப்பாக்கிச்சூடு – 5 பேர் மரணம்

  • December 15, 2024
  • 0 Comments

பிரான்ஸின் Dunkerque மாவட்டத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர. நேற்றைய தினம் இச்சம்பவம் Loon-Plage எனும் சிறு நகர்ப்பகுதியில் உள்ள அகதி முகாமுக்கு அருகே மாலை 5 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. அகதி ஒருவர் ஆயுதத்துடன் வந்து அங்கிருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில்  5 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்குரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆயுததாரி முன்னதாக ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் எனவும், […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்க வானில் மர்ம டிரோன்கள் – டிரம்ப் விடுத்த அதிரடி உத்தரவு

  • December 15, 2024
  • 0 Comments

அமெரிக்க வானில் வட்டமிடும் மர்ம டிரோன்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் வான்பரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம டிரோன்கள் பறந்துள்ளன. இதேபோல் மற்ற பகுதிகளிலும் மர்ம டிரோன்கள் வட்டமடித்துள்ளன. மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டிரம்ப்புக்கு சொந்தமான கோல்ப் மைதானத்தின் மீதும் மர்ம டிரோன்கள் பறந்துள்ளது. இந்த டிரோன்களால் தேச பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என வௌ்ளை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

live location ஷேர் செய்யலாம்.. Instagram இல் புதிய அம்சம்

  • December 15, 2024
  • 0 Comments

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் முதலிய தகவல் பரிமாற்ற செயலிகளானது, தொடர்ந்து தங்களது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் இளம்வயதினரின் கூடாரமாக இருந்துவரும் இன்ஸ்டாகிராம் 3 புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்துவதில் செயல்பட்டுவருகிறது. அறிமுகப்படுத்தவிருக்கும் செல்லப்பெயர் (NickName), 17 ஸ்டிக்கர்ஸ் பேக், லைவ் லொகேஷன் ஷேரிங் போன்ற அப்டேட்கள் மெசெஞ்சர் சாட்டிங்கை மேலும் சுவாரசியமாக்குகின்றன. இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு கூடுதல் ஃபன் மெட்டீரியலாக 17 ஸ்டிக்கர் பேக்குகளும், அதில் 300-க்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்களும் இடம்பெறவுள்ளன. இவை […]