இலங்கை செய்தி

இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல் – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

  • September 21, 2024
  • 0 Comments

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்கள் தங்களது உத்தியோகபூர்வ அடையாள ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டுப் பயணத்திற்காக விமான […]

இலங்கை

இலங்கையில் வாக்களிக்காத இலட்சக்கணக்கான மக்கள் ! வெளியான தகவல்

  • September 21, 2024
  • 0 Comments

இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் 4 மணியுடன் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 75 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். இதன்படி, சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்தியாவில் நோயாளி படம் பார்த்தபடி இருக்க மூளை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

  • September 21, 2024
  • 0 Comments

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த படத்தை நோயாளி பார்த்தபடி இருக்க, மருத்துவர்கள் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது. இந்தியாவின் ஆந்திர மாநிலம், காக்கிநாடா அரசுப் பொது மருத்துவமனையில்தான் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. ஏ. அனந்தலட்சுமி, 55, என்ற பெண் நோயாளியின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். கைவிரல்கள் மரத்துப்போதல், அடிக்கடி ஏற்படும் தலைவலி போன்ற பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட […]

ஐரோப்பா

ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட பனிக்கரடி.. சுட்டு கொன்ற பொலிஸார்!

  • September 21, 2024
  • 0 Comments

ஐஸ்லாந்து நாட்டில் 8 வருடங்களுக்கு பிறகு தென்பட்ட பனிக்கரடியை பொலிஸார் சுட்டு கொன்றனர். பனிக்கரடியால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் சுட்டு கொன்றோம் என்று இதற்கு பொலிஸார் விளக்கம் அளித்தனர். பனிக்கரடிகள் இஸ்லாந்தை பூர்வீகமாக கொண்டவை அல்ல. ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் தான் அதிகளாவிலான பனிக்கரடிகள் வாழ்கின்றன. கிரீன்லாந்தில் இருந்து உருகும் பனிக்கட்டிகள் வழியே பனிக்கரடிகள் ஐஸ்லாந்திற்கு வருகினறன. கடையாக 2016 ஆம் ஆண்டு தான் ஐஸ்லாந்தில் பனிக்கரடி காணப்பட்டது. 9 ஆம் நூற்றாண்டில் இருந்து […]

ஐரோப்பா

ஒரே இரவில் 100 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்த ரஷ்ய ராணுவம்

  • September 21, 2024
  • 0 Comments

உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது இந்நிலையில் ஒரே இரவில் 101 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் 53, கிராஸ்னோடர் பகுதியில் 18, மற்றும் கலுகா, ட்வெர் மற்றும் பெல்கோரோட், ஸ்மோலென்ஸ்க் மற்றும் குர்ஸ்க் பிராந்தியங்கள் மற்றும் அசோவ் கடலுக்கு அருகில் பல டிரோன்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு […]

இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் : இலங்கை பிரஜைகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு!

  • September 21, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் அமைதியான முறையில் முடிவுகளைக் கொண்டாடுமாறும், நாடு முழுவதும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சட்டத்தை அமுலாக்குவதற்கு ஆதரவளிக்குமாறும் இலங்கை காவல்துறை குடிமக்களிடம் வலியுறுத்தியுள்ளது. மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும் என்றும் […]

முக்கிய செய்திகள்

இலங்கையில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

  • September 21, 2024
  • 0 Comments

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் […]

பொழுதுபோக்கு

கோட் பட நடிகை மீது அடிதடி கேஸ்.. அப்படி என்ன செஞ்சிட்டாங்க?

  • September 21, 2024
  • 0 Comments

மலையாளத்திலும் தமிழிலும் கவனிக்கும் நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். அண்மையில் வெளியான தளபதி விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மீது தற்போது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை பார்வதி நாயர் கடந்த 2022ஆம் ஆண்டு தனது வீட்டில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனதாகவும் அதற்கு காரணம் வீட்டில் பராமரிப்பாளராக பணிபுரிந்த சுபாஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக நுங்கம்பாக்கம் காவல் […]

மத்திய கிழக்கு

மத்தியகிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 37 பேர் பலி: லெபனான் அமைச்சகம்

  • September 21, 2024
  • 0 Comments

பெய்ரூட் புறநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒரு வருட மோதலில் கொல்லப்பட்டவர்களில் அதன் உறுப்பினர்கள் 16 பேர் அடங்குவதாகவும், மூத்த தலைவர் இப்ராஹிம் அகில் மற்றும் மற்றொரு உயர்மட்ட தளபதி அஹ்மத் வஹ்பி ஆகியோர் இறந்தவர்களில் அடங்குவதாகவும் ஹெஸ்பொல்லா கூறியுள்ளார். இஸ்ரேலிய போர் விமானங்கள் 11 மாதங்களில் லெபனானின் […]

இலங்கை

இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு!

  • September 21, 2024
  • 0 Comments

தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் சுமார் 200 இலங்கை  விமானப்படை (SLAF) வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!