ஐரோப்பா

ஒரே இரவில் 100 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்த ரஷ்ய ராணுவம்

உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது

இந்நிலையில் ஒரே இரவில் 101 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் 53, கிராஸ்னோடர் பகுதியில் 18, மற்றும் கலுகா, ட்வெர் மற்றும் பெல்கோரோட், ஸ்மோலென்ஸ்க் மற்றும் குர்ஸ்க் பிராந்தியங்கள் மற்றும் அசோவ் கடலுக்கு அருகில் பல டிரோன்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கிராஸ்னோடர் பிராந்தியத்தின் டிகோரெட்ஸ்க் மாவட்டத்தில், இரண்டு டிரோன்கள் விழுந்ததால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 1,200 பேர் வெளியேற்றப்பட்டதாக பிராந்திய அதிகாரகள் தெரிவித்தனர் .

இந்த சூழலில், உக்ரேனிய எரிசக்தி வசதிகள், டிரோன் தயாரிப்புப் பட்டறைகள் மற்றும் பணியாளர்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களின் இருப்பிடங்கள் மீது ரஷ்யப் படைகள் நேற்றிரவு உயர் துல்லியமான ஆயுதங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் ஒரு குழு தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்