இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: மாவட்ட அளவிலான வாக்காளர் தொடர்பில் வெளியான தகவல்

  • September 21, 2024
  • 0 Comments

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வீதம் இன்று மாலை 4.00 மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் கணிசமான வாக்காளர் பங்கேற்பு பதிவாகியுள்ளது. நுவரெலியா மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் தலா 80% வாக்களித்தனர், அதைத் தொடர்ந்து பொலன்னறுவை, கண்டி மற்றும் அம்பாந்தோட்டை 78% வாக்களித்தனர். மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் பலவற்றில் 75% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேவேளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மிகக் குறைந்தளவு 68% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு […]

இலங்கை

இலங்கை – திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை!

  • September 21, 2024
  • 0 Comments

இலங்கையில் வரும் செப்டம்பர் 23ம் திகதி அரசு சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன தெரிவிக்கிறார்.

ஐரோப்பா

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்: மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ள ஐரோப்பிய நாடு

  • September 21, 2024
  • 0 Comments

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. US News & World Report என்னும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. உலகம் முழுவதிலுமிருந்து 89 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 17,000 பங்கேற்பாளர்களின் கணக்கெடுப்பு இந்தப் பட்டியலைத் தொகுக்கப் பயன்படுத்தப்பட்டது, சுவிட்சர்லாந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக ஏழாவது முறையாக உலகின் சிறந்த நாடு என்ற பட்டத்தை மீண்டும் ஒருமுறை பெற்றுள்ளது. ந்த ஆராய்ச்சி ஒன்பது ஆண்டுகளாக மட்டுமே […]

இலங்கை

இலங்கை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைதியான முறையில் புதிய ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குவார்!

  • September 21, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைதியான முறையில் புதிய ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குவார் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார். வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த தேர்தல் இலங்கை வரலாற்றில் திருப்புமுனையாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும், அரசாங்கங்களை அமைப்பதற்கும், தலைவர்களை தெரிவு செய்வதற்கும் நாங்கள் இதுவரை தேர்தல்களை நடத்தியுள்ளோம். ஆனால், இந்த தேர்தல் இலங்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். […]

இலங்கை

இலங்கையில் நடந்த மிகவும் அமைதியான தேர்தல்: தேர்தல் ஆணைய தலைவர்

  • September 21, 2024
  • 0 Comments

இலங்கையில் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல், இதுவரை நடைபெற்றவற்றில் மிகவும் அமைதியான தேர்தலாக வரலாற்றில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்களிக்கும் காலப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு !

  • September 21, 2024
  • 0 Comments

கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி இந்திய தூதரக அதிகாரி ஒருவரின் உடல் வாஷிங்டன் டிசி அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த இந்த மர்ம மரணம் குறித்து உள்ளூர் காவல்துறை மற்றும் ரகசிய சேவை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது இறப்பு குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியதூதரகத்தின் உறுப்பினர் ஒருவர் செப்டம்பர் 18 , 2024 அன்று, மாலையில் உயிரிழந்துள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்று ஆழ்ந்த […]

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை – நாமல்!

  • September 21, 2024
  • 0 Comments

வெற்றிகரமான தேர்தலை வெற்றி மனப்பான்மையுடன் அணுகும் போது நாட்டை விட்டு வெளியேற எந்த காரணமும் இல்லை. சில அரசியல்வாதிகளை விட பொதுமக்கள் புத்திசாலிகள் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தமது தேர்தல் விஞ்ஞாபனமொன்றை அறிமுகம் செய்துள்ளதாகவும், அதில் தங்களால் சாதிக்க முடியாத எதையும் உள்ளடக்கவில்லை என்றும் அவர் கூறினார். மக்களின் நலனுக்காக வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். நாட்டின் அரசியல் […]

இந்தியா

இந்தியா: மியான்மரில் இருந்து 900 தீவிரவாதிகள் ஊடுருவல்! உஷார்படுத்தப்பட்டுள்ள மணிப்பூர்

  • September 21, 2024
  • 0 Comments

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், மியான்மரில் இருந்து 900 குக்கி தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்று உளவுத்துறை தகவல் அளித்ததை அடுத்து, உயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். மணிப்பூரின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீவிரவாதிகள் தொடர்பான தகவல்கள் பல்வேறு புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன எனறார். மே 2023 முதல், மணிப்பூர் பெரும்பான்மையான மெய்டேய் மற்றும் சிறுபான்மை குக்கி சமூகங்களுக்கு இடையேயான வன்முறை வெடித்தது. மணிப்பூரில் உள்ள மெய்தேயி […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்!

  • September 21, 2024
  • 0 Comments

இலங்கை முழுவதும் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : வாக்குச் சாவடியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பார்வையாளர் உயிரிழப்பு!

  • September 21, 2024
  • 0 Comments

இரத்தினபுரி, சீவாலி மத்திய கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் சமகி ஜன பலவேக (SJB) சார்பில் பார்வையாளராக இருந்த அறுபத்தெட்டு வயதுடைய நபர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நெஞ்சுவலி காரணமாக உடனடியாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவரது சுகயீனம் வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என […]

error: Content is protected !!