இலங்கை

இலங்கையில் பேருந்தொன்றின் மீது கல்வீசி தாக்குதல்: பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனமடுவ – ஆடிகம பகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனமடுவையில் இருந்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த பேருந்தொன்றின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி ஒருவரும் உதவியாளர் ஒருவரும் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை […]

உலகம் செய்தி

அணு ஆயுதங்களை சேமித்து வைப்பதில் அமெரிக்கா பின்தங்கியுள்ளது

  • June 9, 2024
  • 0 Comments

உலகில் அதிகம் கையிருப்பு உள்ள நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அணு ஆயுதங்களை சேமித்து வைப்பதில் அமெரிக்கா பின்தங்கியுள்ளது. வடகொரியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் அவற்றை பதுக்கி வைத்திருப்பதால், அவர்களும் இன்னும் அதிகமாகக் கட்ட வேண்டும் என்று வெள்ளை மாளிகை ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரிவின் மூத்த இயக்குநர் பிரனய் வாடி தெரிவித்தார். “ரஷ்யா, வடகொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை வேகமாக பன்முகப்படுத்துகின்றன. ஆயுதக் கட்டுப்பாட்டில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. இந்த மூன்று […]

இலங்கை செய்தி

கொழும்பில் தம்பதியினர் செய்த மிக மோசமான செயல்

  • June 9, 2024
  • 0 Comments

நான்கு வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு வந்த பெண்ணொருவரை இந்த தம்பதியினர் அடைத்து வைத்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து பணத்திற்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது. நுகேகொடை சிறுவர் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சில தினங்களுக்கு முன்னர், நுகேகொடையில் உள்ள இந்த வீட்டிற்கு வந்த பதுளை மற்றும் வெலேகெதர பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்கள் […]

ஐரோப்பா

பிரித்தானிய தொலைக்காட்சி தொகுப்பாளரின் உடல் கிரீஸ் தீவில் மீட்பு

கிரீஸ் தீவான சிமியில் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றின் தொகுப்பாளர் மைக்கேல் மோஸ்லி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சிமி தீவில் உள்ள தி அபிஸ் என்று உள்ளூர் மக்களால் அறியப்படும் ஒரு ஆபத்தான குகை வளாகத்திற்கு அருகிலேயே ஒரு குடையுடன் இந்த உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக அவரை தேடும் பணி தொடரப்பட்ட நிலையில், கடற்கரையிலிருந்து பெடிக்கு செல்லும் பாறைப் பாதையில் அவர் நடந்து சென்றபோது, […]

இந்தியா செய்தி

ஒரே ஓடுதளத்தில் இரண்டு விமானங்கள் – மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

  • June 9, 2024
  • 0 Comments

மும்பை விமான நிலையத்தில்ஏர் இந்தியா ஜெட் விமானம் புறப்பட்ட அதே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் நேற்று தரையை தொட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகளிடைய பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனடி நடவடிக்கையில் விமானப் போக்குவரத்து வழக்கமான இயக்குநரகம் சிவில் ஏவியேஷன் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியை பணிநீக்கம் செய்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளி ஒன்றில், இரண்டு விமானங்களும் ஒரே ஓடுபாதையில் காணப்படுகின்றன. ஏர் இந்தியா ஜெட் புறப்பட்ட சில நிமிடங்களில், இண்டிகோ விமானம் […]

பொழுதுபோக்கு

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் அரங்கை நிறைத்த பிரபலங்கள் யார் தெரியுமா?

  • June 9, 2024
  • 0 Comments

இன்று (ஜூன் 9ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார். தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேரு மாநிலங்களில் இருந்து பல துறை சார்ந்த பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இந்த பதியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர். நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி அவர்கள் […]

இலங்கை செய்தி

தொழிலதிபர் ஒருவரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண்

  • June 9, 2024
  • 0 Comments

தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து 15 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு திரும்ப தராமல் மோசடி செய்த பெண்ணை பொலிசார் கைது செய்தனர். மாகொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்,  அந்த பெண்ணுக்கு சொந்தமான சொகுசு கார், பல ஸ்மார்ட் போன்கள் மற்றும் இரண்டு லேப்டாப்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றில் தனது நண்பரின் ஊடாக சந்தேகநபரை அடையாளம் கண்டதாக வர்த்தகர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வதாகக் கூறிய குறித்த […]

இலங்கை செய்தி

கண்டி நகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் – பேராசியர் எச்சரிக்கை

  • June 9, 2024
  • 0 Comments

எதிர்வரும் காலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது கண்டி நகரம் பாரிய வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் ஓய்வுபெற்ற பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் பெய்த அடை மழையினால் கண்டி நகரின் பல இடங்கள் பல தடவைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், கண்டி நகரைச் சுற்றியுள்ள முறைசாரா நிர்மாணங்களால் இந்த வெள்ளம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார். கண்டி நகரில் உள்ள இரண்டு பிரதான கால்வாய்களில் மழை நீர் […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு வேலைகள் வாய்ப்புகள் பற்றி அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

  • June 9, 2024
  • 0 Comments

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 வீதம் ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதன்படி, இம்மாத இறுதியில் முதலாவது குழு இஸ்ரேல் செல்லவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராயும் நிகழ்வில் கலந்து […]

இலங்கை செய்தி

உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணை தேவையில்லை – ஹர்ஷ சில்வா

  • June 9, 2024
  • 0 Comments

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்து அது தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு தெரிவித்ததை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நன்றி […]