இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் 12 பேர் உயிரிழப்பு : 04 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

இலங்கையை  பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்ட புதுப்பித்தலின்படி, இந்த மோசமான வானிலையால் நாட்டின் 24 மாவட்டங்களிலும் உள்ள 227 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது, ​​120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் 345 பாதுகாப்பான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், 11,663 குடும்பங்களைச் சேர்ந்த 36,330 பேர் அங்கு தங்கியிருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 28,324 குடும்பங்களைச் சேர்ந்த 94,134 பேர் உறவினர் வீடுகளில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவான அனர்த்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 8 மரணங்கள் அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பதுளை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக 102 வீடுகள் முழுமையாகவும் 1,952 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்