இலங்கை

காலி சிறைச்சாலையில் மேலும் 05 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி

காலி சிறைச்சாலையில் மேலும் 05 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (05) பிற்பகல் காலி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதிகள் குழுவொன்று சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் 7 நாட்களுக்கு மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்