ஆசியா செய்தி

வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி – எட்டு பேர் காயம்!

வடக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தற்கொலைக் குண்டுதாக்குதல், மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அந்தவகையில் நேற்று பல்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப்பில் பத்திரிகையாளர்களை கௌரவிப்பதற்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிந்துள்ளதுடன் எட்டுபேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலுக்குப் பிறகு மூன்று நாட்கள் இடைவெளியில் சமீபத்திய குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி