இலங்கை

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள்  அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற ‘பிள்ளையன்’ என்பவரை ஜூலை 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேக நபர் இன்று காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பிள்ளையானுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

கல்லடிப் பகுதியில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் மற்றொரு குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றம் இன்று விசாரணை செய்தது. சாட்சிகள் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்