இலங்கை செய்தி

கிளிநொச்சியில் பெண் ஒருவரின் அதிர்ச்சி செயல்

கிளிநொச்சியில் 54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னை நீராவி பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்ட பொலிசார் வீதிச் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, பொதி செய்யப்பட்ட கசிப்பினை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு வேறொரு பகுதிக்கு கொண்டு சென்ற பொழுது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 54 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பினை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன தருமபுர பொலிசார் பறிமுதல் செய்துள்ளதுடன், சந்தேக நபர் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை