ஐரோப்பா

அதிக வெப்பம் – இங்கிலாந்தில் முன்கூட்டியே மூடப்படும் பாடசாலைகள்

அதிக வெப்பம் காரணமாக, இங்கிலாந்து முழுவதும் உள்ள பல பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் முன்கூட்டியே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பிற்கு அமைய வார்மின்ஸ்டரில் (Warminster ) உள்ள கிங்டவுன் (Kingdown ) பாடசாலை, மதியம் 12:25 மணி முதல் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் என்றும்,  பாடசாலைகளுக்கு பிந்தைய பராமரிப்பு மையங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சட்டனில் ( Sutton ) உள்ள ஓக்ஸ் பார்க் உயர்நிலைப் பாடசாலை (Oaks Park High School)  செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மதியம் 12:20 மணிக்கு மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு லண்டனில் உள்ள பெல்மாண்ட்  ( Belmont )  ஜூனியர் பாடசாலை, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மதியம் 1:30 மணிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு செய்ய முடியாதவர்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சட்டனில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் பென்ஹில்டன் (Benhilton ) தொடக்கப் பாடசாலையும், இந்த வாரம் மதியம் 1:15 மணிக்கே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கிறது.

மேலும் நியூபரியில் (Newbury) உள்ள கிங்டவுன்  மற்றும் ஃபாக்லாண்ட் (Falkland) தொடக்கப் பாடசாலைகள் உட்பட பல பாடசாலைகள், மாணவர்கள் தங்கள் உடற்பயிற்சி உடைகளை அணிந்து பாடசாலைக்கு வர அனுமதிக்கின்றன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்