செய்தி வட அமெரிக்கா

டொரண்டோவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இரு தமிழர்கள்!

கனடாவின் – டொரண்டோவில் துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையின் ஒரு பகுதியாக தேடப்படும் இரண்டு நபர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

ஜூன் 7, 2022 அன்று லோயர் சிம்கோ ஸ்ட்ரீட் மற்றும் ப்ரெம்னர் பவுல்வர்டு பகுதியில் அதிகாரிகள் ஈடுபட்ட விசாரணையுடன் இந்த அழைப்பு தொடர்புடையது என்று டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விசாரணை நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரம்ப்டனில் இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி 29 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் மற்றும் 30 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் ஆகியோர் குற்றத்தின் மூலம் பெறப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக தலா மூன்று குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், மேலும் இருவரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

டொராண்டோவைச் சேர்ந்த 36 வயதான ஜஹ்மல் பால்மர் மற்றும் பால் வில்லியம்ஸால் அறியப்படும் பால் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.இதன்படி இரண்டு முக்கிய சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி