இலங்கை செய்தி

புத்தாண்டின் பின்னர் கட்சித்தாவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

புதுவருடத்தின் பின்னர் ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சித்தாவல் இடம்பெறவுள்ளதை எங்களால் மறுக்க முடியாது ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் செல்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண எப்போதும் கட்சிதாவும் நோக்கத்துடனேயே உள்ளார் அமைச்சு பொறுப்பை ஏற்பதுகுறித்தும் ஆர்வமாக உள்ளார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ராஜித எப்போதும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன்  காணப்படுகின்றார் மேலும் கட்சிதாவுவது அவருக்கு பெரிய விடயமல்ல எனவும் நளின்பண்டார தெரிவித்துள்ளார்.

 

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை