இலங்கை

சூடானில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை!

சூடானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அடுத்த சில நாட்களில் பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி  தெரிவித்துள்ளார்

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

சூடானில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் மோதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு மோதலில் ஈடுபட்டுள்ளவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

சமாதான பேச்சுவார்த்தைகளிற்கு முன்னுரிமை வழங்குவதே சாத்தியமான நிரந்தரமான தீர்வு என தெரிவித்துள்ள அலிசப்ரி சூடான் மக்களிற்கு அமைதி சமாதானம் ஸ்திரதன்மை முன்னேற்றம் போன்றவை கிட்டவேண்டும்,

சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து கவனம் செலுத்துகின்றோம்.

அடுத்த ஒரு சில நாட்களில்  சூடானில் சிக்குப்பட்டுள்ள இலங்கையர்களை  பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்