இலங்கை

இலங்கையில் நகைக்கடையொன்றில் அதிர்ச்சி கொடுத்த பெண்

பொல்பித்திகம பகுதியிலுள்ள தங்க நகைக்கடையொன்றில் 61 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் அணியும் கடிகாரம் மற்றும் தங்க மோதிரம் என்பவற்றை வாங்கிக் கொண்டு உண்மையான ரூபா நோட்டுகளுடன் ஏழு போலி ஆயிரம் ரூபா நோட்டுகளையும் சேர்த்து வழங்கியதாக கூறப்படும் பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இப் பெண்ணிடமிருந்து 30 ஆயிரம் ரூபா போலி நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் இப்பெண் மிஹிரன்பிட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவர்.

சந்தேகநபரான பெண்ணுக்கு போலி ரூபா நோட்டுகள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 போலி ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் பொல்பித்திகம பிரதேசத்திலுள்ள தங்க நகை கடை உரிமையாளர் ஒருவரையும் கடந்த வாரம் பொல்பித்திகம பொலிசார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்