ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் மனித உரிமை செயற்பாடு, இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பான செயற்பாடு, குடிவரவு குடியழ்வு செயற்பாடுகளில் தமிழர்களுக்கு முழு ஆதரவை வழங்கி வரும் சுஜன் செல்வன் சிட்னி மாநில தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.அதன்படி புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அதிக தமிழர்களைக் கொண்டுள்ள அவுஸ்திரேலியா மாநிலத்தில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் சுஜன் செல்வன் அவர்கள் சிறந்த சமூக, மனித உரிமை செயற்பாட்டாளராகவும் பணிபுரிந்து வருகின்றார்.

15 வயதில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வதிவிடத்துடன் வாழ்ந்து வரும் சுஜன் அவர்கள் 2015ம் ஆண்டு முதல் கிரீன் கட்சியில் பல தேர்தல்களில் களமிறங்கியுள்ளார்.

கிரீன் கட்சியானது சமூக நல செயல்பாடு மனித உரிமை செயற்பாடு மக்கள் நலன் திட்டங்களை முன்னெடுக்கும் ஒரு கட்சியாக திகழ்கின்றதால் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு குரலாக தான் அதில் களமிறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் எமது மக்களுடைய பிரச்சனைகளுக்கு புலம்பெயர்ந்துள்ள மக்களது பிரச்சினைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

hqxd1

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி