ஆப்பிரிக்கா உலகம் செய்தி

ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா நேசக்கரம்!

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா உதவும் என அந்நாட்டு ஜனாதிபதி Xi Jinping உறுதியளித்துள்ளார்.

Mozambique நாட்டு ஜனாதிபதியுடன் பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

அத்துடன், ஆப்பிரிக்கத் தலைவர்களுடன் இணைந்து அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் சீன ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதேபோல போரை உடனடியாக நிறுத்திவிட்டு சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு போர் நடைபெறும் நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஆபிரிக்க நாடுகளில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு தீவிரமாக செயல்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!