இலங்கை

கொழும்பில் பணத்திற்கு விற்பனை செய்யப்படும் பெண்கள் – பொலிஸார் சுற்றிவளைப்பு

கல்கிசையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண் ஒருவரால் நடாத்தப்பட்ட நிலையமொன்று சோதனையிடப்பட்டுள்ளது.

பணத்திற்காக பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலையத்தை நடத்தி செல்லும் பெண் உட்பட 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றின் விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அந்த இடம் இயங்கி வந்த போதில் அந்த இடத்தில் ஆயுர்வேத வைத்தியர்கள் ஒருவரும் இல்லை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் தாங்கள் கொழும்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த இடத்தில் தங்கி இந்தத் தொழிலில் ஈடுபடுவதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பாணந்துறை, எல்பிட்டிய, நிட்டம்புவ, கடமுலாவ மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களைச் சேர்ந்த 25 மற்றும் 37 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்