இலங்கை செய்தி

வவுனியாவில் மண்வெட்டியால் அடித்து பெண் படுகொலை

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அவ்வேளை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் மண்வெட்டியால் தாக்கி விட்டு , அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை பெண் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை