இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண் முகவர் ஒருவர் தப்பிச் செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பத்து இளைஞர், யுவதிகளிடம் இருந்து 60 இலட்சம் ரூபா பெற்றுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான குறித்த பெண் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் களுகம பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகள் விமான நிலையத்திற்கு சென்ற நிலையில், அவர்களின் ஆவணங்களுடன் அவர் தப்பிச் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை