இலங்கை

இலங்கையில் தீவிரமாக பரவும் கண் நோய்கள் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் இந்நாட்களில் கண் நோய்கள் அதிகளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக்க இதனை தெரிவித்தார்.

கண் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கண்கள் சிவத்தல், இமைகள் வீங்குதல் ஆகியன இந்த நோய்களுக்கான அறிகுறிகளாகும்.

குழந்தைகள் மத்தியில் அதிகமாக பரவி வரும் இந்நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கண் வைத்திய நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக்க அறிவுறுத்தல் விடுத்தார்.

தொடுகை மூலமே இந்த நோய் பரவக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்