இன்றைய முக்கிய செய்திகள் கருத்து & பகுப்பாய்வு

2025ஆம் ஆண்டில் என்ன நடக்கும்? லண்டன் தீர்க்கதரிசியின் கணிப்பால் மக்கள் அச்சம்!

ஏற்கனவே கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு கணிப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உலகமே புத்தாண்டு கொண்டாடி வரும் நிலையில், தீர்க்கதரிசி ஒருவர் கூறிய கருத்து பேசப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டு பிறந்த நிலையில், பலரும் இந்த ஆண்டாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்து வருகின்றனர். அப்படி பல ஜோதிடர்கள் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 38 வயதுடைய நபர் ஒருவர் கணித்து சொன்னது பேசும் பொருளாகியுள்ளது.

2018 இல் கொரோனா போன்ற ஒரு தொற்றுநோய் வரும், அதில் மில்லியன் கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்று முதலில் கூறியவர் இவர்தான். இப்போது இந்த நபர் 2025 ஆம் ஆண்டிற்கான ஒரு கணிப்பு செய்துள்ளார். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

தனக்கு 17 வயதாக இருந்தபோது, ​​யாரோ ஒருவர் தனது கனவில் தோன்றி எதிர்காலத்தைப் பற்றி சொன்னார் என்று கூறுகிறார். இதுவரை அவரது கணிப்புகள் அனைத்தும் அந்தக் கனவை அடிப்படையாகக் கொண்டவை. தனது இளம் பருவத்தில் கோமா நிலைக்கு சென்று திரும்பிய இவருக்கு திடீரென இது போன்ற உணர்வு ஏற்படத்தொடங்கியுள்ளது.

38 வயதான அந்த நபரின் பெயர் நிகோலஸ் அவுஜுவாலா (Nicolas Aujula). தி மிரர் அறிக்கையின் படி, லண்டனை பூர்விகமாக கொண்ட இந்த நபர் பாபா வாங்கா போன்று நடப்பதை முன்கூட்டியே கூறி வருகிறார். இவர் கூறிய படி 2019ஆம் ஆண்டில் கொரோனா நோய் தொற்று உலகத்தையே ஆட்டி படைத்தது. இதனால் இவர் தற்போது கூறிய கணிப்பும் நடந்து விடுமோ என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது.

”2024ல் ரஷ்ய அதிபர் புதின் இறப்பார்” தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கூற்று பலிக்குமா? 2024-ல் என்ன நடக்கும்?

அதாவது, மூன்றாம் உலகப் போர் 2025-இல் நிச்சயமாக நடைபெறும். இது கருணை இல்லாத ஆண்டாக இருக்கும். மதம் மற்றும் தேசியத்தின் பெயரல் மக்கள் ஒருவருக்கொருவர் கழுத்தை அறுத்து கொண்டே இருப்பார்கள். அரசியல் படுகொலைகள் நடைபெறும். பாவமும், வன்முறையும் அதிகளவில் நடைபெறும் என எச்சரித்துள்ளார்.

இதே போன்று, அதிக மழை மற்றும் பேரழிவு வெள்ளம் இருக்கும். லட்சக்கணக்கான வீடுகள் பாதிக்கப்படும். கோடிக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக மாறுவார்கள். கடல் மட்டம் வேகமாக உயரும். இதனால் பல நகரங்கள் மூழ்கும் என கூறியுள்ளார். புதிய ஆண்டில் ஆய்வகங்களில் செயற்கையாக உடல் உறுப்புகள் உருவாக்கப்படும் எனவும் கணித்துள்ளார். உலகப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும்.

மேலும் முக்கியமாக, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு அரசியல் வீழ்ச்சி ஏற்படும். அது மட்டுமின்றி பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே மீண்டும் இணைவு நடைபெறவுள்ளது என கூறியுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் 2025ஆம் ஆண்டில் ஒரு பெரிய பேரிடர் இருக்கும் என்று மட்டும் உணர்கிறது. இவரின் இந்த கணிப்புகளும் சரியாக இருக்குமா என்று பார்க்கலாம்.

(Visited 60 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை